Site Logo

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் செங்கலடி தளவாய் வட்டார மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Views: 66

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் செங்கலடி தளவாய் வட்டார மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் செங்கலடி தளவாய் வட்டார மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி தளவாய் வட்டாரத்தில் உள்ள ரமேஷ்புரம், கணபதிநகர், ஐயன்கேணி கிராமத்தில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா சாணக்கியனால் வழங்கி வைக்கப்பட்டன. 


செங்கலடி ரமேஷ்புரம் சிறி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா சாணக்கியன் அவர்களினால் செங்கலடி தளவாய் வட்டாரத்தில் உள்ள ரமேஷ்புரம், கணபதிநகர், ஐயன்கேணி கிராமத்தில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, செங்கலடி, ரமேஷ்புரம், கணபதிநகர், ஐயன்கேணி, தளவாய் கிராமத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன், சித்திர வேலாயுத சுவாமி ஆலய நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்திச் சங்கம், செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம், கணபதிநகர் சனசமூக நிலையம், ஐயன்கேணி ஆலய நிர்வாகம், தளவாய் மீனவர் சங்கம், செங்கலடி 01 தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதோடு, செங்கலடி தளவாய் வட்டாரத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடுள் குறித்தும் பேசப்பட்டன. 


இன் நிகழ்வில் 

செங்கலடி ரமேஷ்புரம் சிறி சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாக சபையினர், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன்,செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழக நிர்வாக உறுப்பினர்கள், கணபதிநகர் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள்,ஐயன்கேணி ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், தளவாய் மீனவர் சங்கம் உறுப்பினர்கள்,  தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.